பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 01, 2012

கிறுகிறுவானம் - தெரிகிறது என் பால்யம் !


 1.7.2012

    சமீபத்தில் ஆல்பெர் காம்யு-வின் அந்நியன் நாவலைப் படித்து சில கேள்விகளை எனக்குள்ளே கேட்கத் தொடங்கியிருந்தேன். சரியாக தூங்கவும் முடியவில்லை. தொடர் குழப்பங்கள். அந்த வாசிப்பு அனுபவத்தை எழுதலாம் என உட்கார்ந்தால், கேள்விகள் ஒவ்வொன்றும் சுற்றத்தையும் சமூகத்தையும் நோக்கியே செல்கிறது. அபத்தம் என்பது கூட எனக்கு முழுமையாக புரியவில்லை ஆனால்; நாயகன் எந்த தவறும் செய்யவில்லை என்பதை மட்டும் உணர்ந்திருந்தேன். மேலும் அது குறித்து எழுத வேண்டும்.

      அதற்கு முன், இப்போது கிடைத்த மூன்று நாள் இடைவேளையில், இலகுவாக எதையாவது படிக்கலாம் என , என் அலமாரியில் தேடினேன். கிடைத்தது, எஸ்.ரா-வின் 'கிறுகிறுவானம்' எனும் குழந்தைகளுக்கான நாவல்.

(சில மாதங்கள் நாவல்கள் மட்டும் படிக்க வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன்.)

     ஒரு கிராமத்து சிறுவன் அவன் மொழியிலேயே கதையை சொல்லிச் செல்கிறான். இருக்கமான சூழலில் இருந்து மீண்டும் என் பால்ய காலத்திற்கு பயணித்தது போல உணர்ந்தேன். நன்றாக சிரித்தேன். சில நண்பர்களை நினைத்துப்பார்த்தேன்.

     பால்ய வயதுக் கேள்விகளை இன்னமும் நாம் கேட்டுக் கொண்டுதால் இருக்கிறோம். முந்தையது மனம் கேட்கும் கேள்வி; பின்னது அறிவு கேட்கும் கேள்வி. இன்னமும் இதற்கான விடைகளைத்தேடிக் கோண்டிருக்கிறோம்.

         நாவலில்;
       
   தன்னை ஓட்டைப்பல்லு என அறிமுகம் செய்துக் கொள்கிறான்  செண்பகராமன். இவனுக்கு மட்டுமல்லாமல் தனக்கு தெரிந்த எல்லோர்க்கும் ஒவ்வொரு பட்டப்பெயர் இருப்பதை பெருமையாய் சொல்கிறான். ஆசிரியர்களும் அதில் அடக்கம்.

       தொடர்ந்து ஒரு சிறுவன் நம் முன் அமர்ந்து , நடந்தையும் நடக்காததையும் மிகைப்படுத்துஇ உணர்வுப்பூர்வமாக சொல்வதுபோது அமைந்திருக்கிறது எஸ்.ரா-வின் எழுத்து நடை.

  குழந்தைகள் கதை சொல்லும் போது கவனித்திருக்கிறீர்களா? (இப்போதெல்லாம் நம்மில் பலர் அதை செய்வதில்லை)  அப்போது ஏற்ற இறக்கமாக , கண் பெரிதாகி, கைகளை வானுக்கும் பூமிக்கும் ஆட்டியெல்லாம் கதை சொல்லுவார்கள். உடன் கதைக்குள், கதைக்குள், கதைக்குள் ஒரு கதையைச் சொல்லி மீண்டும், இடைவேளியில்லா கதையை தொடர்வார்கள்.

       சொல்லிக் கோண்டுபோகும் கதையில் திடீரென நம் அனுபவத்தையும் கேட்டு; கேள்விகள் கேட்டு பதிலுக்கு காத்திராமல் கதையை நகர்த்திக் கொண்டே செல்வார்கள். இந்நாவலில் அந்த சிறுவனும் அதையேத்தான் செய்கிறான்.
  
         உங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பியிருந்தால்,
இந்த  நாவலை படித்துக் காட்டச் சொல்லுங்கள் . கடினமென்றால் பிள்ளைகளை உட்காரவைத்து நீங்கள் இந்நாவலை படித்துக் காட்டுங்கள். உங்கள் பிள்ளைகளோடு இன்னும் நீங்கள் நெருக்கமாவீர்கள்.  மொத்தமே 80 பக்கங்கள்தான். 

      நாவலில் இறுதியில் இப்படியாக சிறுவ கேட்கிறான்;
"எல்லா பெரியவங்களும் ஒரு காலத்துல சின்ன பையனா இருந்தவங்க தானே, ஆனா பலரும் அதை மறந்துருறாங்க. அது தான் ஒரே பிரச்சனை. சரி தானே? "

    அந்த ஓட்டைப்பல்லு கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் முன் அப்போது நான் கதை சொன்ன பெரியவ்ர்களையும்; இப்போது என்னிடம் கதைசொல்லும் குழந்தைகளையும் நினைத்துப் பார்க்கிறேன்.


நன்றி.

- தயாஜி-

   

2 comments:

சித்திரவீதிக்காரன் சொன்னது…

எஸ்.ராமகிருஷ்ணனின் மற்ற நாவல்களைப் போல சிறுவர்களுக்கான நாவலான கிறுகிறுவானமும் முக்கியமான நாவல். நம்முடைய இளம் பிராய நினைவுகளைக் கிளறிவிடக்கூடியவை. இன்றைய இளைய தலைமுறை இழந்துவருபவைகளையும் நினைவு படுத்தும் கதை.

இன்னும் நிறைய நல்ல நாவல்கள் வாசிக்க வாழ்த்துகள். அந்நியனும் நம்மை தூங்கவிடாமல் செய்யும் நாவல்தான். பகிர்விற்கு நன்றி.

தயாஜி சொன்னது…

நன்றி நண்பரே....
தொடர்ந்து உங்கள் கருத்தினை பதியுங்கள்....

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்