பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 29, 2012

வேணாம் அழுதுடுவேன் 2





29.6.2012

வேலை நிமித்தமாய்; தபால் நிலையம் சென்றிருந்தேன். என் முறை வரும் வரை வழக்கம் போல வேடிக்கை. வேடிக்கைப் பார்வையில் சிக்கிய ஒன்றை இங்கே பதிகிறேன்.

ஏங்க சார் உங்க 'western union'-ல தமிழங்களே இல்லையா.........

.இதையெல்லாம் பார்க்கறதுக்கும் கேட்கறதுக்கும் தமிழர்களுக்கு நேரமில்லைன்னு நினைச்சிட்டிங்களோ....

இல்லைன்னா இதை எழுதி , திருத்தி கொடுத்ததே தமிழந்தான்னு சொல்றிங்களா....? யாருங்க அந்த புண்ணியவான்..
என்ன...?
சரியா கேக்கல, சத்தமா சொல்லுங்க.......

-தயாஜி-

நான் எனும் அடையாளம்





காப்பாற்றுங்கள்
கனவுகள் என்னை
துரத்துகின்றன
ஒழிந்துக்கொள்ள
உறங்க வேண்டும் நான்......

...............................................................................

அந்த எழுத்தாளனுக்கு
எல்லா உறவுகளும்
எல்லா உணர்வுகளும்
கதைகளாகவே இருக்கின்றன;
அதனால்தான்
அவன் எழுகிறான்
உடன் அழுகிறான்;
தொடர்ந்து எழுதுகிறான்.

...........................................................................



 நடந்த ஒன்றிற்கும்
நடக்காத ஒன்றிற்கும்
நடக்கவேண்டிய ஒன்றுக்கும்
நடக்கக்கூடாத ஒன்றுக்கும்
நானும் நீயும்
சொல்லாலும் செயலாலும்
காய்களை நகர்த்திக் கொண்டே இருக்கிறோம்
சதுரங்கம் கண்மூடும் ஒவ்வொரு கணமும்......

ஜூன் 28, 2012

அதே மோதிரம் 6 - மர்மத் தொடர்




பாகம் 6

    நான் ஆனந்தன். முழு பெயர் நித்தி ஆனந்தன். வழக்கமான ஆளாகத்தான் நானும் இருந்தேன். இருந்தேன் என்பது இறந்தகாலம்தானே. ஆனால் அந்த ஒவ்வொரு மாற்றமும் என் நினைவில் உயிராய்.
    ஆங்கில படங்களில் மின்னல் பட்டு சக்தி பெறுவது, சிலந்தி கடித்து சக்தி பெறுவது, மோதிரம் அணிந்து சக்தி பெறவது போல இப்படித்தான் இதுதான் இதலால்தான் என என் சக்தியை நான் சொல்ல முடியாது. ஏனெனில் இந்த சக்தி எனக்குள் இருப்பது அல்ல; என்னுடன் இருப்பது.
     உள் இருப்பது;உடனிருப்பது. எத்தனை வித்தியாசங்கள் கொண்ட வார்த்தை இவை. கொஞ்ச காலமாகத்தான் மணியை எனக்கு தெரியும். தெரியும் என்பதைவிட, தெரிந்து கொள்ளும் படி அமைந்தது. மணியும் மற்ற யாரும் வேண்டுமானால், என்னை மர்ம மனிதனாக நினைத்துக் கொள்ளலாம். இரவில் மட்டுமே என்னை பார்க்கலாம். நான் கவனிக்கப்படாதவன் எனலாம். ஆனால் நான் தினமும் மணியை கவனித்துக் கொண்டுத்தான் இருக்கிறேன். மணியின் விரலுக்கு அந்த மோதிரம் வந்தது முதல், மஞ்சல் முகம், கழிவறையில் கழட்டப்பட்ட மோதிரம் , ஆளில்லாத போதும் பின்னால் நின்ற யாரோ, யாதவி என்ற கையொப்பம், மின் தூக்கியின்  மேல் பார்த்த முதலாளியை மீண்டும் கீழே பார்ப்பது, அவ்வளவு ஏன் இன்று மோதிரத்தில்   தெரிந்த பெண் உருவம் வரை. அது யார் ? யாராய் இருக்கும்
      இன்னும் சொல்லப் போனால், என் வேலையே அதுதான் அல்லது இப்படியும் சொல்லலாம் வேலை முடியும் வரை அல்லது இப்படியும் சொல்லலாம் மணியின் கதை முடியும் வரை.
     குழப்பம் கொடுக்கலாம், விளக்கம் கேட்கலாம். ஆனால் சில முடிச்சுகள் சிலரால் மட்டுமே அவிழ்க்க முடியும். அல்லது சிலரால் மட்டுமே அழிக்க முடியும். மணியின் கதையில், அவன் அணிந்திருக்கும் ‘அதே மோதிரம் ’ குறித்த மர்மங்கள் அவிழ்க்கப்படுமா இல்லை அழிக்கப்படுமா என்பதுதான் என் கேள்வி.
    இதில் நான் கூட இல்லாமல் போகலாம். அல்லது நான் மட்டுமே இருந்தும் தொலைக்கலாம்.
    இதன் மூலத்தை உங்களோடு நான் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். இங்கு, மணிக்காக நான் வந்ததற்கு முன் , என் சராசரி வாழ்க்கை தலைகீழானது !
    அப்போது என் வயது நினைவில் இல்லை. வயது சொல்லி, மரியாதையையா வாங்க போகிறோம். சொல்லப்போவது அனுபவத்தை வயது எதுக்கு. அப்போது; அடிக்கடி எங்கள் வீட்டின் பக்கத்தில் குழந்தையின் அழுகுரல் கேடக ஆரம்பித்தது. இரவு வேலை செய்ய வேண்டிய வாரம் என்பதால் பெரிதாக எனக்கு படவில்லை. ஆனால் அது பெரிதான ஒன்று என்பது எனக்கு மறுவாரம்தான் பட்டது. என்னை பாடாய் படுத்தியது. இரவு வேலை முடிந்த வாரம். காலை வேலை ஆரம்பிக்கும் போது , முதல் நாள் விடுமுறை கிடைக்கும். அந்த விடுமுறை முழுக்க தூங்கியே கழித்துப் பழகியவன் நான். வேறு வழியெதுவும் இருக்கவுமில்லை.
    எங்கேயோ குழந்தையின் அழுகுரல். கொஞ்சம் கொஞ்சமாக காதில் விழ ஆரம்பித்தது. அப்போது நான் என் சிறகை விரித்து வீட்டின் கூரைமேல் உட்கார்ந்திருந்தேன். எங்கோ குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடன் என் காதலியும் வந்திருந்தாள். இன்று கொஞ்சம் தாமதம். என் கோவத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கும் முயற்சியில் அவள் கொஞ்சத் தொடங்கியிருந்தாள். எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அழுகுரல் கேட்கிறது இதற்காகவே அவள் தாமதமாக வருவாளா என ஏங்கியிருக்கிறேன்.
    இப்போது அந்த குழந்தையின் அழுகுரல் என் காதலிக்கும் கேட்கிறது என நினைக்கிறேன். கொஞ்சல் கொஞ்சம் கொஞ்சமாம அதன் உச்சத்தை தொடும் வரை, உச்சம் என்பது முத்தம்தான். ஆனால் உங்களைப்போல  உதடுக்கு கொடுக்கும் வேலை அல்ல. காதலியை அந்த அழுகுரல் ஏதோ செய்திருக்கவேண்டும், எனக்கும்  எரிச்சலாக இருந்தது. என் சிறகும் அவள் சிறகும் ஒன்றையொன்று தொட்டுக் கொள்ளும். அவ்வளவுதான என நினைக்காதீர்கள். எங்கள் இறகுகள் தொட்டுக் கொள்ளும் போது உதிரும் இறகுகள்தான் எத்தனை அழகு தெரியுமா... அப்போதே புதிதாக இறகுகள் முளைக்கும்.   
     என் இறகும் அவள் இறகும் ஒன்றையொன்று உரச இன்னும் சில வினாடிகளே இருக்கின்றன. இறகுகள் உதிரப் போகின்றன, புதிய இறகுகள் முளைக்கப் போகின்றன. மகிழ்ச்சி. உச்சம். ஆனால் அந்த வினாடிகள்தான் எத்தை கொடுமையானது தெரியுமா. இதுவரை இப்படி நடந்ததேயில்லை. இறகும் இறகும் உரச எத்தனிக்கும் அந்த கடைசி ஒரே நொடியில் அந்த குழந்தையின் அழுகுரல் காதில் அருகில் கேட்டது. கேட்டதை விடை காதை கிழித்தது என்னாலாம். காதா முக்கியம் . இப்போதைக்கு உரசவேண்டிய இறகுகள்தானே முக்கியம். நாசமாய் போன குழந்தையின் அழுகுரல், காதலையின் காதாலை கெடுத்தது.
     “போங்க போய் அது என்னன்னு பாருங்க முதல்ல” என அவள் சொல்லி சிறகை மடக்கிவிட்டாள். விரிந்த என் சிறகின் கதையை நினைத்துப் பாருங்கள். எத்தனை பாவம் நான். காதல் உச்சத்தில் இருக்கும் போது, இப்படி ஒரு கல்லை போட்ட அந்த குழந்தையை, இல்லையில்லை அந்த குட்டிச்சாத்தானை மிதிக்கவே கோவத்தின் எழுந்தேன். கூரையின் இருப்பதையும் மறந்து, நடக்க ஆரம்பித்துவிட்டேன். அப்படியே கால் இடறி தரையை நோக்கி.............
      நல்லவேலை தலையணையை வைத்திருந்தேன். பொத்தென்று வழக்கம் போலவே விழுந்துவிட்டேன். வழக்கமான கனவு என்பதால் இப்படி பழகிவிட்டிருந்தேன்.
     எப்போதும் இறகும் இறகும் உரசும் போது, உதிரும் இறகும் , முளைக்கும் இறகும் போதுதான் காதலியின் மடியில் படுக்க நினைத்து கட்டிலில் இருந்து கிழே விடுவேன் ஆனால் இப்போது அந்த அழுகுரல் விழ வைத்தது. தெரியுமா கனவில் கேட்ட அழுகுரல்ம் இப்போதும் கேடிகிறது, ஒருவேளை தூக்கத்தின் கேட்ட அழுகுரல்தான் என் கனவில் கலந்திருக்குமோ.?
    எழுந்தேன். ஒரு முறை அழுகுரலைக் கேட்டேன். ஒரு திசையில் இருந்துதான் கேட்டுக்கொன்றிருந்தது. நடக்கலானேன்.
“அம்மா....அம்மா....”
“...............................”
“அம்மா.... எங்கம்மா இருக்கிங்க...?”
“என்ன, ஒரே ஆச்சர்யமா இருக்கு, சாரு இன்னிக்கு சீக்கிரம் எழுந்திருச்சிட்டிங்கலே.....!”
“ அந்த குழந்தை இப்படி கத்தி காதைக் கிழிச்சா... எப்படி தூங்கறதாம்... ”
“எந்த குழந்தை...?”
“ம்... எந்த குழந்தையா.. அதான் பக்கத்துவீட்டில் இருக்கே அந்த குட்டிபிசாசுதான்.... கேட்குதா இல்லையா, காட்டு கத்து கத்துது.... நான் போய் என்னான்னு கேட்டுட்டு வரேன்... பிள்ளையை வளர்க்கறாங்கலா பிசாசை வளர்க்கறாங்கலான்னு தெரியலை...”
“நித்தி... நித்தி எங்க போற..?”
“நீங்க இருங்க நான் போய் நல்லா கேட்டுட்டு வரேன்... பக்கத்து வீட்டில் மனசாலுங்க இருக்காங்கன்னு தெரியவேணாம்”
   கொலைவெறிதான் எனக்கு. வாசல் கதவை திறக்க சாவியை எடுக்கும் போதுதான் உணர்ந்தேன். குழந்தையின் அழுகுரல் இப்போது இல்லை. அதற்குல் அம்மா வந்துவிட்டார். குழம்பிய முகத்துடன் தெரிந்தார்.
“ஏன் காலையிலேயே இவ்வளவு கோவம்.. என்ன ஆச்சி..? என்ன குழந்தை கத்துனிச்சி இப்போ...?”
“அதான் அந்த பக்கத்துவீட்டு குழந்தைதான்... காதே கிழியுது போங்க...”
கதவை திறந்தேன். நேரே பக்கத்துவிட்டின் வாசலில் நின்றேன். கதவு பூட்டப்பட்டிருந்தது. சில வினாடிகள் அங்கேயே நின்றேன். வீடு திறும்பினேன்.
“காலையிலேயே என்னதான் ஆச்சி நித்தி உனக்கு, எந்த குழந்தைதான் கத்துனிச்சி இப்பொ.... எனக்கு ஒன்னுமே கேட்கலையே....”
“வயசானாலே காது இப்படிதான் மந்தமாகிடும்னு கேள்விபட்டிருக்கேன். அதுக்குன்னு இப்படியா..? பக்கத்துவீட்டில் இருந்து வர சத்தம் கூடவா கேட்காம போய்டும். எங்க யாரையும் காணோம். குழந்தையை வீட்டில் விட்டு பூட்டிடு புருசனும் பொண்டாட்டியும் எங்க போய்ட்டாங்க.... அது காட்டு கத்து கத்துது. இப்பதான் சத்தத்தைக் காணோம், ஏதும் ஆயிருச்சோ....?”
“என்னப்பா சொல்ற..?”
“இவ்வளவு நேரம் தெலுங்குலையா சொல்லிகிட்டு இருந்தேன்.”
“பக்கத்துவீட்டில் உள்ளவங்க ரெண்டு பேருதான். அந்த ஆளு வேலைக்கு போயிருக்காருன்னு நீனைக்கறேன். அந்த அம்மாவோட அப்பாக்கு உடம்பு சரியில்லையாம். பார்க்க போயிருக்காங்க... வீட்டில் வேற யாரும் இல்லையே...?”
“இவ்வளவு விசயம் உங்களுக்கு எப்படி தெரியும்..?”
“அந்த ஆளு வேலை முடிஞ்சி வந்தா சாவியை கொடுக்க சொன்னாங்க. இங்கதான் இருக்கு சாவி. வீட்டில் வேற யாரும் இல்லைன்னுல்ல சொன்னாங்க... நீ என்னமோ குண்டை போடற..?”
“ஏம்மா, அவங்களே வந்து இன்னும் ஒரு மாசம் கூட ஆகல... யாரு எவருன்னே தெரியல... கொடுத்தாங்கன்னு வீட்டு சாவியை வாங்கி வச்சிருக்கிங்கலே... என்ன நீங்க..?”
“என்னப்பா பண்றது. அவசரமா போகனுமாம். வீட்டுக்காரு மதியம்தான் வருவாராம். வேற சாவி இல்லையாம். அதான் இங்க கொடுத்துட்டு போனாங்க... ஆனா குழந்தையை பத்தி ஒன்னுமே சொல்லலையே...”
“எனக்கு சத்தம் கேட்டுச்சிம்மா... குழந்தை பசிக்கு அழற மாதிரி... சரி அந்த அம்மாவோட போன் நம்பர் இருக்கா..?”
“இல்லப்பா...”
“வெளங்கிடும்.. கடவுளே...சரி வீட்டு சாவியைக் கொடுங்க... போய் குழந்தைக்கு என்னதான் ஆச்சின்னு பார்க்கறேன்.”
“ஏதும் பிரச்சனை ஆகிட போதுப்பா... நாம வேணும்ன்னா போலிசை கூப்படலாமா....”
“போலிஸ் எதுக்கு போய் , பொம்பா, ஆம்புலன்ஸ்... இன்னும் எல்லாத்தையும் வர சொல்லுங்க..”
“என்னப்பா... இப்படி கிண்டல் செய்ற..?”
“ஆமாம் இப்ப கேளுங்க.... யாராச்சும் சாவியை கொடுத்தா எதையும் முழுசா கேட்காம வாங்கி வச்சிக்கோங்க... சாவியை கொடுங்கம்மா... நான் முன் வீட்டில் இருக்கர அப்துல்லாகிட்ட விபரத்தை சொல்லி நாங்க ரெண்டு பேரும் போய் பார்க்கறோம். அவரும் பகுதி நேர போலிஸ்தானே...”
     அப்துல்லாவிடம் விபரத்தை சொன்னேன். குழங்ந்தை என்பதால் பிரச்சனை ஏதுமில்லை என்றார். பக்கத்துவீட்டு வாசலில் கொஞ்ச நேரம் இருந்தோம். குழ்ந்தையின் அழுகுரல் கேட்கிறதா என உன்னிப்பாக கேட்டோம். இல்லை. இருந்தும், கதவை திறந்தோம். சத்தம் கொடுத்துப் பார்த்தோம். முடிந்தவரை குழந்தை எங்கெல்லாம் இருக்குமென யூகிக்கிறோமோ அங்கேயெல்லாம் தேடிப் பார்த்தோம். படுக்கையறையில் பெரிதாக ஒரு குழந்தையின் புகைப்படம் மட்டும் இருந்தது.
    அழகான முகம். கலையான புன்னகை. சும்மாவா சொன்னார்கள் குழந்தையின் சிரிப்பில் கடவுளைப் பார்க்கலாம் என.
   இல்லை என்பது உறுதியானது, நானும் அப்துல்லாவும் ஏதோ பேசியவாறு வாசலை நோக்கி நடந்தோம்.  இப்போது குழந்தை சத்தம் கேட்டது. நான் நின்றேன். அப்துல்லா, முன்னோக்கி நடந்துக் கொண்டிருந்தார்.
    நான் திறும்பினேன். அழுகுரல் கேட்கும் இடத்தை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நடக்கலானேன். படுக்கையறை. அழுகுரல் சத்தமாக கேட்டது. அய்யோ அந்த சத்தம் வரும் இடத்தை கண்டுபிடித்துவிட்டேன்.
    அந்த அழுகுரல் ,அது , அது,  அந்த குழந்தையின் புகைப்படத்தில் இருந்துதான் வருகிறது. அந்த குழந்தை அழுகிறது.......!   
    இதோ குழந்தை என்னைப் பார்த்ததும் கையை நீட்டுகிறது...
எனக்கு, எனக்கு........


(இனி அடுத்த மாதம்....)
நன்றி ஜூலை 2012 -  அன்பு இதயம்
 

ஜூன் 21, 2012

அதே மோதிரம் 5 - மர்மத் தொடர்

À¡¸õ 5



    உடைந்த கைபேசியில் இருந்து இப்படியொரு குறுஞ்செய்தி வருவது சாத்தியமா..? வந்திருக்கிறதே! எப்படி..?
    மணியின் கைபேசி கோளாறை எப்படி சொல்வது. அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகள் சில சமயம் இதைவிட தாமதமாகவும் கிடைத்திருக்கிறதுபல முறை பொம்மி சொல்லியும் தன் கைபேசியை மணி மாற்ற விரும்பவில்லை.
    வழக்கம் போலவே எழுந்தவன் அலுவலகம் சென்றான். வழக்கத்திற்கு மாறாக மணியின் முகம் வேறுமாதிரி இருந்தது. யார் கவனித்தார்களோ இல்லையோ மணியின் மேலதிகாரி கவனித்திருக்க வேண்டும். மணி, முதலாளி அறைக்கு அழைக்கப்பட்டான். மதிய உணவு நேரம். கைபேசியைக் கையில் எடுக்காமலேயே மதியம் வரை மணி கடந்திருப்பது அதிசயம்தான். பொம்மி நிச்சயம் மூன்றுமுறையாவது அழைத்து பேசிவிடுவாள். மணியும் அப்படித்தான். ஒரு அலுவலகத்திற்கே தெரியும் மணி அழைக்கும் நேரமும் பொம்மி அழைக்கும் நேரமும். கிண்டலும் இடம்பெறுவதுண்டு.
   மேலதிகாரியின் அறை,
வணக்கம் சார்...”
வணக்கம் மணி. உட்காருங்க.... ”
சார் கூப்டிங்கலாமே...?”
ஆமாம். வேலையெல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு.”
ஏன் சார்..? என் வேலையை நான் சரியாதான் செய்துகிட்டு வரேன். ஏன் ஏதும் பிரச்சனையா..?”
ச்சே ச்சே, பிரச்சனையெல்லாம் ஒன்னுமில்ல.... கொஞ்சம் குழப்பம் அதான்.”
குழப்பமா.. என்ன சார் ஆச்சி..”
அதை நான் உங்களை கேட்கனும். அதான் கூப்டேன்
ஒன்னும் புரியலையே சார், யாரும் என் மேல புகார் கொடுத்திருக்காங்களா சார்..?”
அதையெல்லாம் காது கொடுத்து கேட்க எனக்கு நேரம் இல்லை மணி. நீங்கள் இங்க வேலைக்கு வந்து மூனு வருசம் ஆகியிருக்குமா..?”
இருக்கும் சார்.”
ஒவ்வொருமுறையும் உங்க வேலையில் ஒரு சுறுசுறுப்பு இருக்கும், வேகம் இருக்கும், தெளிவு இருக்கும். ஆனா இப்போ...”
ஆனா என்ன சார்...எனக்கு புரியல
எனக்கும்தான் புரியலைஇந்தாங்க இதை பாருங்க...”
    மேலதிகாரி மணியிடம் சில கடிதங்கள் உள்ள கோப்புகளை நீட்டினார். மணி அந்த கோப்புகளை ஒவ்வொன்றாக பார்க்கப் பார்க்க இதயத்துடிப்பு அதிகரித்தன. கைகள் நடுங்கின. குளிர்சாதன அறையிலும் வேர்த்தது.
    வேலைக்கு வந்த சில மாதங்களிலேயே, வேலைகளைக் கற்றவன் மணி. பாகுபாடின்றி அனைத்து வேலைகளையும் செய்ய தயார இருப்பான். மேலதிகாரி சொன்னது போலவே, எப்போதும் வேலையில் வேகமும் சுறுசுறுப்பும் இருக்கும். ஆனால் இப்போது..!
   வழக்கமாக மணி பார்வையிட்டு கையெழுத்திட வேண்டிய கடிதங்களில்தான் அப்படியொரு அதிர்ச்சி. ஒவ்வொரு பக்கத்திலும் கையெழுத்திட்டுருந்தான். எப்போதும் அப்படித்தான் செய்வது வழக்கம். ஆனால், இப்போது அந்த ஆச்சர்யம், குழப்பம் அதே கையெழுத்துதான். மணி என கையெழுத்திடும் எல்லா இடங்களிலும் யாதவி என்ற பெயரை எழுதியிருந்தான்.
   யார் அந்த யாதவி..!
மணியின் கை அந்த கையெழுத்தை பயத்தில் தடவியது. மோதிர விரல் அந்த பெயரை தடவியதும் இதுவரை இருந்த பயம் மணிக்கு இல்லை. மோதிரம் மின்னியது அவனது கண்களும். இதுவரை தான் சிரித்திடாத ஒருவகை சிரிப்பை சத்தமின்றி சிரித்தான்.
   “மணி... மணி...”
   ஏதோ மயக்கத்தில் இருந்தவன் தெளிந்தான்.
ம்..ம்.ம்.ம் என்ன சார்..?”
என்ன ஆச்சி மணி உங்களுக்கு..? யார் இந்த யாதவி..?”
தெரியலை சார்..”
இது வழக்கமா நீங்க பார்வையிடும் கோப்பு தானே..?”
ஆமாம்
எப்போது நீங்கதானே சைன் வைப்பீங்க..?”
ம்
அப்போ இதில் யாதவின்னு எழுதினது நீங்கதானா..?”
அதான் சார் எனக்கும் தெரியலை... குழப்பமா இருக்கு...”
சரி, உங்களைப் பார்த்தாலே தெரியுது. ஒன்னும் பிரச்சனை இல்லை. நான் இதை பார்த்துக்கறேன். உங்களுக்கு ஒரு வாரம் விடுமுறை கொடுக்கறேன்......”
முடிப்பதற்குள் மணி,
சார்....!”
மணி இது நான் கொடுக்கற தண்டனை இல்லை. நீங்க நல்லா வேலை செய்யற ஒரு ஆள். எனக்கு என்னமோ இந்த குழப்பத்துக்குக் காரணம், அதிகமான வேலைப்பளுன்னு நினைக்கிறேன். நீங்க நிம்மதியா ஒரு வார விடுமுறைக்கு பிறகு புது தெம்போடு வாங்க. நம்பறேன்.”
நன்றி சார்...”
   மணி, கோப்புகளுடன் வெளியேறினான். இன்னும் பொம்மியிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. மணி அதனை சட்டையும் செய்யவில்லை. அலுவலகத்தின் தன் இடத்தில் செய்ய வேண்டிய வேலைகளை நண்பர்களிடம் கொடுத்து கிளம்பினான். மின் தூக்கிக்கு வந்ததும் அருகில் மேலதிகாரி அறையை பார்த்தான்.
   மீண்டும் ஒருமுறை மேலதிகாரியுடம் சொல்லி விடைபெற அறைக்கதவை திறக்க முயற்சித்தான் மணி, கதவில் கை படும் முன்பே மின் தூக்கி திறந்தது. அதில் மேலதிகாரிதான் வந்தார்.
என்ன மணி கிளம்பியாச்சா..?”
ஆமாம் சார், அடுத்த வாரம் தெளிவோட வருவேன்னு நினைக்கிறேன்.”
கண்டிப்பா அந்த நம்பிக்கையில்தான் நானும் இருக்கேன். இந்த விடுமுறையில் நிச்சயம் உங்களுக்கு பதில் கிடைக்கும், கிடைக்கனும்
சார்..!”
கவனமா போய்ட்டு வாங்க...”
மேலதிகாரியின் பேச்சு மணிக்கு புரியவில்லை. தலையாட்டியவாரே மின் தூக்கியில் நுழைந்தான். அப்போது,
எது எப்படியோ மோதிரம் பத்திரம் மணி!”
சொல்லி சிரித்தார் மேலதிகாரி.
மின் தூக்கி மூடியது.
 கீழ் நோக்கி இறங்கியது.
 நின்றது.
 கதவு திறந்தது.

எதிரில் மணியின் மேலதிகாரி. அவரே பேச ஆரம்பித்தார்,
மணி நீங்க வேலைக்கு வந்ததில் இருந்து இப்பதான் முதன் முதலா ஒருவாரம் விடுமுறை கேட்டிருக்கிங்க. ஏன் ஏதும் விசேசமா.... , கல்யாணம் வேலைன்னு சொல்லுங்க. சரி சரி பார்த்து கவனமா இருங்க. ஒரு வாரம் கழிச்சி பார்க்கலாம்.”
மணிக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. மேலதிகாரிதான் விடுமுறை கொடுப்பதாக சொன்னார். இப்போது தான் விடுமுறை கேட்டதாக சொல்கிறார். இதனையே திரும்ப திரும்ப யோசித்ததால், மாடியில் பார்த்த மேலதிகாரி எப்படி தனக்கு முன் கீழே வந்தார் என்பதை யோசிக்கவில்லை. அலுவலகத்தை விட்டு வெளியேறினான்.
    எல்லா குழப்பத்திற்கும் இந்த மோதிரம்தானே காரணம், இதை எப்படியாவது கழட்டுவது என முடிவெடுத்தான்.
வலது கை விரல்களை விரித்தான். கையை திருப்பித்திருப்பி மோதிரத்தைப் பார்த்தான். இடது கையை வலது கைபக்கம் கொண்டுவர மணியால் முடியவில்லை. இரு கைகளுக்கும் இடைவெளிகள் அப்படியே இருந்தது. இடது கை எவ்வளவு நெருக்கமாக வலது கைபக்கம் வர முயல்கிறதோ அவ்வளது தூரமாக வலது கை நகர்ந்தது. நேருக்கு மாறான இரு காந்தங்களை ஒட்ட வைக்க முயலும் போது காந்தம் நகர்ந்துக் கொண்டே இருப்பது போல் இருந்தது.
   மோதிரம் மணியில் விரலில் இறுகுவது போல் உணர்ந்தான் மணி. வலித்தது. அந்த மோதிரம் மீண்டும் ஜொலிக்க ஆரம்பித்தது. இந்த முறை அந்த மோதிரத்தில் மணியால் ஒரு பெண்ணின் உருவத்தைக் காண முடிந்தது.
    அவள்................

அவள் குறித்த அறிமுகம் அடுத்த வாரம்

(தொடரும்)
நன்றி ஜூன் 2012 'அன்பு இதயம்.'

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்