பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 26, 2011

கோப்பை தேநீருடன் ஓர் ஒப்பந்தம்




எச்சரிக்கைகள்

வேண்டுகோல்கள்

கேள்விகள்

விருப்பங்கள்

ஆசைகள்

எல்லாம் எதிரே கை கூப்புகின்றன
என் தியானத்தை நிறுத்த....

சாத்தியமற்ற சக்திகளின் சேர்ப்பு
அவை...

கையோடு சேர்க்கிறேன்
காதோடு கேட்கிறேன்

நுகர்கையில் சாசித்துவாரம் நமநமக்கிறது

இல்லாத குளிரைக் கொணர்ந்து
இருக்கையோடு நிறுத்தி

கால்மேல் காலாய்
ஆணவம் காட்டி

இதழ் சூட்டில்
கேலி செய்வது

எத்தனையெத்தனை இன்பம்...

கோப்பைக்குள் இருப்பது தேநீரல்ல;
எனக்கான வெற்றிட நிரப்பி....

நிரம்பி வழியும்
என் வெற்றிடப் பொழுதுகளை

பழுதுகளாக்கும்
கோப்பைகள் அவை....

இருந்த நொடியிலேயே
மத இட தேவை இன்றி

நான் தியானிக்கிறேன்

இளஞ்சூட்டு கோப்பை தேநீரில்

முதல் சுட்டை உதடு
உணரும் முன்
உள்ளம் என்னை தயாராக்குகிறது.....

இதழ் சூட்டுக்குப் பின்
சில நொடிகள்
கண்மூடுவது

தூக்கப் பற்றாகுறை அல்ல.....

மரணிக்கும் என் வெற்றிடங்களுக்கு
மரியாதை நிமித்த
மௌன அஞ்சலி......

சூட்டின் ஆவியல்ல
கவனியுங்கள்

ஆன்ம சுத்திகரிப்பின்
அடையாள குறிப்பு...




எச்சரிக்கைகள்

வேண்டுகோல்கள்

கேள்விகள்

விருப்பங்கள்

ஆசைகள்

எல்லாம் எதிரே கை கூப்புகின்றன

கோப்பை தேநீர்
பித்தம் சேர்க்குமாம்....

அக்கரை; என்ற புரியாமை

கோப்பை தேநீர் தியானம்
கைகூடாத வரையில்

கடவுள்கள்கூட உங்களை நெருங்குவதில்லை

கோப்பை சூட்டுக்கே இடம் கொடுக்கா
மனிதர்கள் நீங்களாயுற்றே.....

டிசம்பர் 25, 2011

NO FREE READING




துப்பாக்கி இருந்தால் கொடுங்களேன்;
சுடவேண்டியுள்ளது....

அழும் நூல்களைக் கண்டு
அமையாய் இருப்பது அழகல்ல....

கண்ணீரில் எழுத்துகள் மிதக்கின்றன....

கதறல் காதை கிறுக்குகின்றன..

பணம்தான் தேவையெனில்
விற்க பொருளா இல்லை..

புத்தகங்களை ஏன்?

விற்பனைக்கு இருப்பது
காகிதங்களும்
எழுத்துகளும்
பிரபலங்களும்
அல்ல...

அவை நினைத்தால்
பேசுவும்
மாற்றவும்
ஏற்றவும்
இறக்கவும்
தூற்றவும்
செய்யும்....

அலாமாரி சிறையே வலிக்கிறதாம்
அதற்கிடையில்;

‘NO FREE READING’

வாசக வக்கிரம் வேறு.....


பணம்தான் தேவையெனில்
விற்க பொருளா இல்லை

புத்தகங்களை ஏன்..?

வாங்க வக்கிருப்பின்,
கால் வலித்து படிக்க

நாங்கள் பணக்கார பரதேசியல்ல.....
கண்ணாடி அலாமாரியை அழகுபடுத்த...

கை வையென
நூலொன்று அழைக்க
விரலொன்றை வைத்தால்
விழியொன்றை காட்டுகிறது...

‘NO FREE READING’

இருந்தும்
வெக்கமின்றி தடித்த
நூலொன்றை புரட்டி
முன்னுரை வார்த்தைகளில்
மூழ்கினேன்...

வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள்
ஒன்றோடு ஒன்று
ஒன்று ஒன்றோடு
வார்த்தைகளை சொல்ல
வார்த்தைகளே இல்லை

அப்படி ஒரு வார்த்தைகள் அவை...

வார்த்தைகள் வார்த்தைகள்

யார் எழுதியிருந்தால் என்ன
வார்த்தைகள் எப்போதும் வார்த்தைகள் தானே....

பிடிக்காதவன் எழுதினாலும்
படைத்தவனே கிறுக்கினாலும்
வார்த்தைகள் என்றும் ஊனமாவதில்லை...

இப்போது கூட வார்த்தைகள்தான்
என் அறைமுழுக்க
ஆடை முழுக்க
கழிவறை முதற்கொண்டு
சஞ்சரிக்கின்றன..

எப்படி சொல்வேன்
வார்த்தைகள்
வார்த்தைகள்..

அறை பக்கம்கூட
வார்த்தைகளை அனுபவிக்கவில்லை
அதற்குள்,

“சார்”

என பல்லை மூடி
புருவம் உயர்த்தி சொன்னான்
அவன்
வக்கிர வார்த்தைகளை...

கெட்ட வார்த்தைகளின்
திட்டினேன்
வார்த்தைகளை வாய்க்குள் அடக்கி...

புத்தகங்களை கண்டேனெனில்
தாயாகிறேன்
ஆர்வப்பால் சுரந்து
அப்படியே நின்று
வார்த்தைகளை
மார்போடு அணைக்கிறேன்....

இன்று என்னை மலடாக்கி
என் வார்த்தைக் குழந்தைகளை கதற
வைக்கிறான் கண்முன்னே
கடைக்கார கமினாட்டி.....



நூலொன்றை
பார்க்கிறேன்

பக்கங்களை
திருப்புகிறேன்

வார்த்தைகளை
விழுங்குகிறேன்

தலைப்பில்
நிற்கிறேன்

எழுதியவரில்
தேடுகிறேன்

எதையெதையோ
எண்ணுகிறேன்

அட்டையை
தடவுகிறேன்


இதையெல்லாம் மீறி
படிக்காமலும்
நூலை
திறக்காமலும்
வாங்கனும் எனின்

கடைக்காரர்களே ஆணுறைதான் உங்கள் விறபனைக்கு
பொறுந்தும்.....

உங்களை ஆசை தீர திட்டித்தீர்க்க
ஆசை

வார்த்தைகள்தான் பாவம் பார்க்கின்றன.....

என்ன இருந்தாலும்
நான் இன்னமும்
பணம் கட்டவில்லை.....

உங்கள்
விற்பனை நூல்களை
எவனிடம் வேண்டுமானாலும்
விற்று தொலைக்கலாம்....

ஆர்வமுடையோன்
மட்டுமே
நூலுடன் உங்கள் கடையையும்
நினைவுக் கூறுவான்...

கவனித்தது உண்டா


நீங்கள் எழுதி வைத்திருக்கும்
வக்கிர வார்த்தைகள்

திறக்கப்படாத நூல்களின்
காலை நக்கி மன்னிப்பு கேட்கின்றன
உங்களுக்காக....

ஆனால் நீங்கள்?

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்