பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 13, 2010

ராக்கூத்துச் சாமிகள்....







ராக்கூத்து ஆடும்,
ரங்கன் மகனைத் தெரியுமா..?
என்னோடு அவன்,
இரண்டு ஆண்டு பழக்கம்….

கர்ஜித்துப் பேசி,
கண்வாளை வீசி.....
அவன் போடும் வேசம்,
அத்தனையும் நிசம்................

ஆனாலும் அவன் மாணவன்;
அவனப்பனோ சாதாரணாமானவன்....

எங்களோடவன் அமரும் போதும்,
எதிரெதிர் தினம் கடக்கும்போது..
தலைகுணிவான்,
எங்கள் வசைமொழியால்;

கூத்தாடிமகனென குலுங்கிக் குலுங்கிச் சிரிப்போம்..
ஆத்தாடி நாங்க அவ்வளவு மோசம்;

எங்ககிட்டவன் எதுத்துப் பேசமாட்டான்,
ஏண்டான்னு கேட்டா அதுவும் சொல்லமாட்டான்,

ஆனாலுமவன் நல்லாப் படிப்பவன்;

இன்னிக்கோடு சேர்த்து,
ஆறுநாள் அவனைக் காணோம்...

எங்கடான்னு விசாரிச்சோம்;
என்னென்னமோ கேள்விபட்டோம்;

இனி ரங்கன் மகன்தான்..
ராக்கூத்து ஆடனுமாம்...!

அவனாட ஆட்டம்தான்,
இனி;
அவன் குடும்பத்தை காக்கனுமாம்...

சினிமா சின்னத்திரை;
சீரியஸா ஆனபின்னே,

சிந்திக்கவைக்கும் தெருக்கூத்தை,
சிலராச்சும் பார்கனுமே...

அம்மிக்கல்லு ஆட்டுக்கல்லு;
அதுபோல இனிமேலு;
தெருக்கூத்தும் ஆகிடுமே...

கண்காட்சி பொருள் போல,
காட்சிக்குத்தான் இருக்கும்....

இதை நம்பி பொழச்சவங்க….
இனி எங்கப்போவாங்க...

ரங்கன் மகனுக்கப்பறம்,
ராகூத்தை நான் பாக்கலை...
அதைத் தொடர ஆளில்லை..

என்னைப்போலின்று

எதுகையும் தெரியாமல்..

மோனையும் புரியாமல்..

சீர் வரிசை-யில் நிற்காமல்....

சந்தமும் இல்லாமல்

எழுத்து வரிசையிலும்;

இன்பம் இல்லாமல்...

எண்ணியபடி எழுதி...

மரபுகளை மறந்ததுபோல்...

தெருக்கூத்தும் போயாச்சி...
தெருவெல்லாம் அழுக்காச்சி...

உழைப்புகளை வெறுத்தாச்சி...
உழைப்பவர்களை தொலைச்சாச்சி...

சீ...சீ.....காட்சி
திரைக்கு வந்தாச்சி..

தெருகூத்து ஆட்டம்
கேவலம் என்றாச்சி....

பசிக்கானா ஆட்டம் போய்;
ருசிக்கான நோட்டம்; வந்து...

கண்ணைக் கெடுக்க காட்சி தந்து....
கெட்டுக்குட்டிச் சோறாச்சி...

ரங்கன் மகன் போல;

சொக்கன் மகனுக்கும்
சொல்லவேண்டியக் கதையுண்டு...

சொல்லும் நேரம் வரட்டும்
சொல்லிவிடுகிறேன்........

அதுவரை.............
ராக்கூத்து சாமிக்கு
ரங்கன் மகன் சார்ப்பில்
அவன் கலைக்கு
என்னால் முடிந்த அஞ்சலி.....


இப்படிக்கு தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்