பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 17, 2009

அடுத்தது நீ......

...... #3/8 முதல் 14/8 வரை மின்னல்fm (மின்னல் பன்பலையில்) நாள் ஒன்றுக்கு 2 நிமிடம் முதல் 3 நிமிடம் வரை ' எண்ணங்கள் வண்ணங்கள் ' தொகுப்பில் பிற்பகல் மணி 2.30க்கும், ' நட்சத்திர மேகம் ' தொகுப்பில் இரவு மணி 9.55க்கும் ஒலியேறிய தொடர் குறு நாடகம் இது. இதன் கடைசி முடிவை நேயர்கள் அழைத்து சொல்லவேண்டும்...அவர்களின் முடிவும் இக்கதையின் முடிவும் ஒத்துப்போகுமனால்... சொன்னவருக்கு மடிக்கனினி கிடைக்கும் (எழுதியவருக்கு .......?????? )இதற்கு சிரமம் பாராமல இசையாக்கம் செய்து மேலும் மிரட்டியவர் நண்பர் ஆனந்த....நடித்தவர்கள் தேன்மொழி.லோகேஷ்வரி கணேசன்,பொன் கோகிலம், சரஸ், சித்ரா.ஆனந்த.... அவரோடு கதைசொல்லியாக "நான்".
மர்மக்கதை எழுதும்படி மேலதிகாரிக் கேட்டுக் கொண்டதற்கினங்க.... ஒரே நாள் இரவில் எழுதி முடித்தேன்..! எனக்கே இது சற்று ஆச்சர்யம்தான். இருந்தும் , என் வாழ்வில் நடந்தவற்றை நினைத்துப் பார்த்தால் ........இதுபோன்ற கதைகள் பெரிய ஆச்சர்யத்தை எனக்கு ஏற்படுத்துவதில்லை.....
என் கதைகளிலும் கவிதைகளிலும்..... ஏதாவது ஒரு மூலையில் 'நான்' (நானாகா முயற்சிக்கும் நான் ) ஒலிந்திருப்பேன்.......
படைத்தவன் இத்துடன் விடைபெறுகின்றேன்.... இனி படியுங்கள்......வாய்ப்பிருந்தால் கருத்து சொல்லுங்கள்இல்லையேல் விடைபெறுங்கள்.......! .............................#

#....................................#....................................................#




அடுத்தது நீ.............(1)


யாரும் எதிர்ப்பார்க்கவில்லை இப்படி நடக்குமென . அவளைத்தவிர.இது ஒன்றும் அவளுக்கு புதிதும் அல்ல....!
ஆரம்பத்திலிருந்தே அவளால் பலவற்றைச் சரியாக யூகிக்க முடிந்தது.
சில உதாரணங்கள்..........
சிலரைப் பார்த்ததும், அவர்களின் பிறந்த தேதிகளைச் சரியாகச் சொல்லுவாள்.திரைப்படங்களும், வெற்றி பெறுமா இல்லையா என்பதை முன்கூட்டியே சொல்லிவிடுவாள்.சாலையில் செல்லும் போது அது விபத்துக்குள்ளாகும் என இவள் சொல்லும் ஐந்தாவது நிமிடம் குறிப்பிட்ட வாகனம் விபத்துக்குள்ளாகும்.
இவ்வாரு பலவற்றை சரியாக யூகித்தவள்தான் தேவி
அவள் நடப்பதை யூகிக்கின்றாளா..?அவள் யூகிப்பது நடக்கின்றதா...?
என்ற கேள்வி அவளது தோழிகளுக்கு வந்தது ........ அபாயம்....... அன்றுதான் ஆரம்பித்தது..
அபாயம் எப்படி ஆரம்பித்த்து என்பதை தெரிந்துக் கொள்ள காத்திருங்கள் நாளைவரை....................

#-------------------------------------#-----------------------------------------------#



அடுத்தது நீ .........(2)


அன்று ஞாயிறு, தேவியும் அவளின் இரண்டு தோழிகளான....
கஸ்தூரியும் கவிதாவும் தேவியின் வீட்டில் அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். அந்த இரண்டு தோழிகளின் பேச்சு எங்கோத் தொடங்கி தற்சமயம், முழுக்க முழுக்க தேவியின் அந்த அபூர்வ சக்தியை சுற்றியே இருந்தது. ஆம் அன்றுதான் அவர்கள் தேவிக்கு இருக்கும் யூகிக்கும் சக்திக்கு அபூர்வ சக்தி என்று பெயரிட்டனர்.
அவர்களின் பேச்சு இப்படியாக தொடர்ந்தது, “ சரி தேவி இப்போ நான் இந்த புத்தகத்திலே ஒரு பக்கம் திருப்புவேன்,........ அது எத்தனையாவது பக்கம்னு நீ சரியா சொல்லனும்....அப்படி சொல்லிட்டா..... உனக்கு அபூர்வ சக்தி இருக்குன்னு 100% நாங்க ஒப்புக்கொள்வோம் இல்லைனா..... அது அப்படி ஒன்னும் அபூர்வ சக்தி கிடையாது....எதார்த்தமா நடக்கறதை நீ சொல்றே அவ்வளவுதான்...சரியா..?’
என கேட்டாள் கஸ்தூரி.
அதற்கு கவிதா, “என்ன கஸ்தூரி அப்படின்னா நீ தேவியை நம்பலையா..?”
“சும்மாதான்..... நாமும் சோதிச்சுதான் பார்ப்போமே.... என்ன தேவி சம்மதமா..?”
தேவி சிரித்தவாரே,
“ஆமா பெரிய கண்டுபிடிப்பு உனக்கு என்ன நோபல் பரிசா கொடுக்கப் போறாங்க.......இந்த அபூர்வ சக்தியால நான் படும் கஷ்டம் எனக்குதான் தெரியும்...... ” “அப்படியென்ன பொல்லாத கஷ்டம்..?”
என இருவரும் வினவ....
அதற்கான பதிலை அந்த இருவரோடு செர்ந்து நாமும் தெரிந்துக்கொள்வோம்..
அதற்கு நாளைவரை காத்திருங்கள்.........
#-------------------------------------#-----------------------------------------------#



அடுத்தது நீ.....(3)



சமையல் அறையில் இருந்து மூவறும் வரவேர்பறைக்கு வருகின்றனர்.
கஸ்தூரி, “ஆமா ஏதோ கஷ்டம்னு சொன்னியே என்ன தேவி அது..?அந்த சக்தியால் நீ நடக்கறதை சொல்லிடற.....
அவ்வளவு ஏன் பரீட்ச்சைக்கு வரும் கேள்விகளைக் கூட சரியா கணிச்சு படிச்சு ‘பாஸ்’ ஆகிடற......
(சாப்பாட்டு தட்டின் சத்தம்.வானொலி சத்தம்)
உன் புண்ணியத்தில நாங்களும் ‘பாஸ்’ ஆகிடறோம்..!”
கஸ்தூரியின் இந்த கேள்விக்கு,
“ஹலோ நாங்கன்னு எதுக்கு என்னையும் சேத்துகற..நான் படிச்சுதான் பாஸ் ஆகிருக்கேன்..!” என்றாள் கவிதா.
அதற்கு தேவி,(லேசாக இருமிவிட்டு)
“படிச்சுதான் பாஸ் ஆகிருக்கியா...... சொல்லவே இல்லை....”
கவிதா,
(சிரித்தவாரே)
“இல்ல நாம் எல்லாம் படிச்சுதான் பாஸ் ஆகிருக்கோம்னு வேளியே சொல்லியிருக்கேன் அதான்..”
சட்டென்று தேவி,(அதிர்ச்சியுடன்,நடுக்கமானக் குரலில்) “அதான்..... அதான்...... என்னோட கஷ்டம் அதான் என்னோட பயம்........ ”
கஸ்தூரி,
“அப்படி சொல்றதுல என்ன கஷ்டம்..பயம் உனக்கு....... அதுக்கு ஏன் உன் கை இப்படி நடுங்குது.....?”
கவிதாவும் கஸ்தூரியும், (கத்துதல்)
“தேவி...தேவி..”
தேவிக்கு என்ன நடந்தது , அவளின் பயத்திற்கு என்னதான் காரணம்....
தெரிந்துக் கொள்ளக் காத்திருங்கள் பயமில்லாமல் நாளைவரை..........
#-------------------------------------#-----------------------------------------------#

அடுத்தது நீ.....(4)


ஏதோ பேச ஆரம்பித்த தேவி, பேச்சுத் தடுமாற மயக்கமடைந்து விழுகிறாள்.
இருவரும் , “தேவி.... தேவி....”
கஸ்தூரி , “கவிதா நீ பார்த்துக்கோ நான் போய் தண்ணி கொண்டுவறேன்..”
கஸ்தூரி,
“முருகா..முருகா தேவிக்கு ஒன்னும் ஆகக்கூடாது... ஒன்னும் ஆகக்கூடாது..காப்பாத்து ... காப்பாத்து.....”
கஸ்தூரியின் மடியில் படுத்திருந்த தேவியின் எடை கூடியது. அவள் தன் சுயத்தன்மையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தாள்.
கஸ்தூரி,
“கவிதா...... கவிதா..... தண்ணி எடுக்க அவ்வளவு நேரமா.. சீக்கிரம் இங்க வா......?”
(பக்கத்தில் இருக்கும் கடிகாரம், சட்டென்று கீழே விழுகின்றது.....)
(சூழ்நிலை மிக பதட்டமாக மாறுகின்றது......)
மீண்டும் கஸ்தூரி,
“கவிதா..கவிதா.. சீக்கிரம் வா.....” (காற்றின் வேகம் ஜன்னலை மோதியது..விசித்திர சத்தம் அறை முழுக்க பரவியது.....கண்ணாடிக்கிண்ணம் விழுந்து சுக்கு நூறாகின்றது.)
அப்போது தேவி கொஞ்சமும் தனக்கு சம்பந்தம் இல்லாதக் குரலில்,
“அவ..வரமாட்டா..அவ வரமாட்டா....”
பேசியது யார்..? தேவிக்கு என்ன ஆனது..? கவிதா எங்கே..?தெரிந்துக்கொள்ள கத்திருங்கள் நாளைவரை.....

#-------------------------------------#-----------------------------------------------#




அடுத்தது நீ.....(5)



(காற்றின் அழுத்தம் ஜன்னலை வேகமாக மோதியது...)
சட்டென்று வானொலியும் தொலைக்கட்சியும் மாறி மாறி இயங்க ஆரம்பித்தது.....
எதிர்பாராத வண்ணம் மின்சாரத்தடை ஏற்படுகின்றது
சமையல் அறையில் இருந்து கவிதாவின் குரல்.... “கஸ்தூரி எங்கே இருக்கே..... ”
தேவியிடமிருந்து விசித்திர சிரிப்புச் சத்தம்.
(சிரிப்புச் சத்தம் அறையெங்கும் எதிரொலித்தது )
கவிதா,
“கடவுளே இங்கே என்ன நடக்குது... ஒன்னுமே புரியலையே”
கவிதா தன் மடியில் படுக்கவைத்திருந்த தேவியை தள்ளிவிட்டு எழுந்தாள்.
(சத்தம் கெட்டல்)
அவள் செய்வதறியாது ,கஸ்தூரியையும் காணாது வெளியே ஓடத் தொடங்கினாள்,
வாசலை நெருங்கியவள், ஓடும் வேகத்தில் எதோ கால் தடுக்கி....கீழே விழுந்தாள்.. மின்சாரத்தடையால் சுற்றிலும் இருட்டு சூழ்ந்திருந்தது.
(இடி இடிக்கும் சத்தம்,அடை மழை சட்டென்று தூறும் சத்தம்)
மின்னலின் வெளிச்சத்தில் அவள்..அவள்... பார்த்தது....!
ஏதோ ஒரு உருவம் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்துக் கிடந்தது.இவளுக்கு மிக நெருக்கமான..பழக்கப்பட்ட ஒரு உருவம்தான் அது....
அந்த உருவம் கஸ்தூரியா..?
தேவியா..?
இல்லை வேறு யார் அந்த நேரத்தில் ரத்தவெள்ளத்தில்..?
தெரிந்து கொள்ள காத்திருங்கள் நாளைவரை......

#-------------------------------------#-----------------------------------------------#




அடுத்தது நீ.....(6)


(அலுவலக மதிய உணவு வேலை..)
“எங்க தேவா நீ சொல்லு அது யாரா இருக்கும்..? கேசவன் உனக்கு தெரியுமா அது யார்னு...? தெரிஞ்சா சொல்லேன் பார்க்கலாம்...?”
தேவா, “எங்களுக்கு எப்படி மணி தெரியும் ..! நீயே சொல்லேன்..”
மணி,“அட..அது எப்படி முடியும்....நான்தான் அப்பவே சொன்னேனே..கதை மட்டும்தான் சொல்லுவேன் முடிவை பேப்பர்ல கதை பிரசுரம் ஆனதும் வந்த நீங்களே படிச்சு பார்த்து தெரிஞ்சிக்கோங்கன்னு.. சரின்னுதானே சொன்னிங்க....... நீங்களே கண்டு பிடிங்க..?”
கேசவன், “மணி.....” (முடிப்பதற்குள்)

மணி தொடர்ந்து,
“உனக்கு மட்டும் என்ன ஹிந்தில சொல்லனுமா..? கதை பேப்பர்ல வந்ததும் படிச்சுப் பார்த்து தெரிஞ்சிக்கோ..என்ன..!”
கேசவன்
“அதுல்ல மணி.. ” மணி கொஞ்சம் சிரித்தவாறே
“அதுல்லனா வேற எது.....?”
தயங்கியவாறு கேசவன்,
“ஒன்னு கேட்கனும்..?”
“கடனைத்தவிற வேற என்ன வேணும்னாலும் கேளு நண்பா..?”
கேசவன், “இந்த மதிரி கதை உன்னால எப்படி யோசிக்க முடிந்தது..?அதும் நீ சொல்லும்போதே அப்புறம் என்ன நடக்கும்னு..எங்க மனசு பதபதக்கற மாதிரி எப்படி எழுத முடிந்தது..?”
மணி, “சொன்னா நம்புவியா..?”
“ம் சொல்லு..!”

“எனக்கும் அந்த அபூர்வ சக்தி இருக்கு.....!”
கேசவன் ,(ஆச்சர்யமாக)
“என்ன மணி சொல்ற உனக்கும் அந்த சக்தி இருக்கா..?அப்பொ உனக்கும் அப்படி நடக்குமா..?”
மணி சொல்வது உண்மையா..?
அபூர்வ சக்தி இருக்கின்றதா..?
இப்படி ஒரு கதை எழுத அந்த அபூர்வ சக்திதான் காரணமா..?ஒருவேளை அப்படியொரு அபூர்வ சக்தி மணியிடம் இருப்பது..
அவன் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்காதா..?
அதன் விளைவைத் தெரிந்துக் கொள்ள காத்திருங்கள் நாளைவரை......

#-------------------------------------#-----------------------------------------------#



அடுத்தது நீ.....(7)

(மோட்டார் சத்தம்)
மணி மனதிற்குள் பேசக்கொண்டே மோட்டாரில் பயணிக்கத்தொடங்கினான்.
(மணி மனதில்,)
கேசவனின் கேள்வி அவன் மனதில் அலைமோதத் தொடங்கியது
(அடுத்தது நீ 6)
கேசவன் ,(ஆச்சர்யமாக)
“என்ன மணி சொல்ற உனக்கும் அந்த சக்தி இருக்கா..?அப்பொ உனக்கும் அப்படி நடக்குமா..?”
(கேசவனின் குரல் எதிரொலித்தது..மோட்டார் சத்தத்தோடு..)
மணி,“ஆமா எப்படி எனக்கு இப்படி ஒரு கதை சாத்தியம்..? நான் இந்த மாதிரி கதைகளை படிக்கிறதும் இல்லை இந்த மாதிரி திகில் படங்களையும் பார்க்கிறதும் இல்லை..?
..ஆம்.. அன்னிக்கு இப்படித்தான் கதை எழுதலாம்னு.. உட்கார்ந்தேன்..! என்னோடக் கை... ம்.....என்னோடக் கை சொந்தமாவே எழுத ஆரம்பிச்சது..! ”மீண்டும் கேசவனின் குரல்,
கேசவன் ,(ஆச்சர்யமாக)
“என்ன மணி சொல்ற உனக்கும் அந்த சக்தி இருக்கா..?அப்பொ உனக்கும் அப்படி நடக்குமா..?”
மணி,
“ஒரு வேலை உண்மையாவே எனக்கு அந்த அபூர்வ சக்தி வந்திருச்சா..? கூடவே ஆபத்து வருமா...? என் உயிருக்கு ஏதும்..?”
குழப்பத்தில் மோட்டாரில் பயணித்தவனின் கண்ணில் பட்டது அந்த கைபேசி,
பேருந்து நிலையம் காலியாக இருந்தது, மணி இரவு வேலை முடிந்து செல்வதால்... அந்த கைபேசியின் வெளிச்சம் அவனுக்கு தன்னை அறிமுகப்படுத்தியது..
அந்த கைபேசி இவன் கண்ணில் பட என்ன காரணம்..?ஒருவேளை அபூர்வ சக்தியின் விளையாட்டா..? கேசவன் சொன்னது பலிக்கப் போகின்றதா...?
அதன் சூட்சுமம் அறிந்துக்கொள்ள காத்திருங்கள் நாளைவரை.....

#-------------------------------------#-----------------------------------------------#


அடுத்தது நீ...(8)

(மோட்டார் சத்தம் ,மோட்டர் நிறுத்தும் சத்தம்)
அந்த பேருந்து நிலையத்தில் யாரும் இருக்கவில்லை.. தனியாய் இருந்த கைபேசியை மணி கையில் எடுக்கவும் அது அதிர்ந்து ஒலியெழுப்பவும் சரியாக இருந்தது....
(கைபேசியின் சத்தம்)
மணியின் கைபேசி உரையாடல்,
“ஹலோ .....ஹலோ....!”
கொஞ்சநேரம் கழித்து, மறுமுனையில், தயங்கி தயங்கி..ஒரு பெண்ணின் குரல்....
“ஹலோ யார் பேசரா....ஹலோ..?”
“நான் மணி பேசறேன்.. இது உங்க ‘போனா..’?”
“ஆமா அது என்னோட ‘போன்’தான்.. நான்தான் தவறவிட்டுட்டேன்..? நீங்க எங்க இருக்கிங்க நான் உடனே வரேன்...பிலீஸ்..கொடுத்துடுங்க... ”
“இது என்னங்க வம்பா போச்சி...? ஏதோ கீழேகிடந்த போனை எடுத்தா..இப்படிப்பெசறிங்க..?”
(அழுதவாறு) “மன்னிச்சுடுங்க..மன்னிச்சுடுங்க.. நான் எங்க வரட்டும் சொல்லுங்க வரேன்”
(கடுப்புடன்) “சரி சரி .... அங்காசாப்புரி வழியா வந்திங்கன்னா ஒரு ‘பஸ் ச்தோப்’ இருக்கும் பாருங்க அங்க வாங்க ..சீக்கிரமா வாங்க.. காத்திருக்கேன்..என்ன... ”
“நன்றிங்க ...நன்றிங்க... உடனே வரேன்..”
“ஆமா உங்க பேரு..?” “தேவி......! காத்திருங்க வந்திட்றேன்...!!”
“தேவியா..?!”
மணி அதிர்ச்சியடைந்தான்..
அந்த தேவி இவன் கதையில் வந்தவளோ..? அவளும் அபூர்வசக்தி கொண்டவள்தானே.. இவனை ஏன் காத்திருக்கச் சொல்கின்றாள்...
அந்த காத்திருத்தலில் நோக்கமும் ,அந்த அபூர்வ சக்தின் பாதிப்பையும் தெரிந்துக்கொள்ளக் காத்திருங்கள் நாளைவரை...
#-------------------------------------#-----------------------------------------------#



அடுத்தது நீ.....(9)

மணி காத்திருந்தான்...அவனது காத்திருப்பின் நீளம் அதிகரித்தது..சாலையில் வாகனங்கள் வேகமாக செல்ல ஆரம்பித்தன.
இவனும் மேலும் காத்திருக்காமல் மோட்டாரை நோக்கி நடக்க அந்த கைபேசி மீண்டும் ஒலித்தது.
(விபத்துக்குள்ளாகும் சத்தம்)
அவனின் பார்வை இருண்டது..ஏதோ பிகைமண்டபத்தில் தான் இருப்பதாக உணர்ந்தான்..இரு கண்ணையும் நன்றாக தேய்த்துக் கொண்டு பார்க்க ஆரம்பித்தான்..
தன் கண் எதிரில் தனது மோட்டார் ஒரு பெரியா கனரக வாகனத்தின் கீழ் ஒரு உருவத்தோடு ரத்தவெள்ளத்தில் கிடந்தது.
அது யார் என எட்டிப்பார்க்க எழுந்தவனின் தோளில் ஒரு மெண்மையானகை பட்டது..
அந்த மெண்மையானக் கைக்கு சொந்தமான பெண்ணின் குரல்
“பதட்டப்படாதே அது வேரயாரும் இல்லை..........??????”
அந்த கைக்குச் சொந்தாக்காரர் யார்.....? என்ன சொன்னார்..?விபத்துக்குள்ளாகி ரத்தவெள்ளத்தில் கிடப்பது யார்..?கைபேசியை வாங்க தேவி வந்தாளா..?





#................................#....................................................#
......இதுவரை படித்தவற்றின் முடிவு எப்படி இருக்கும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்..?நீங்கள் எதிர்ப்பாராத முடிவைத் தரத்தான் என் ஆவல்...........அதில் எனக்கு வெற்றியா... என்பதை நீங்கள்தான் சொல்லனும்.....தொடர்ந்து முடிவைப் படியுங்கள்....................
#................................#.....................................................#



அடுத்தது நீ----முடிவு (10)

“பதட்டப்படாதே அது வேரயாரும் இல்லை.. நீதான்...!”
அதிர்ச்சியில் மணி,
“இல்லை..இல்லை.. நீ பொய் சொல்ற...யார் நீ..”
(சிரித்தவாறே) “நான் தான் தேவி நேத்து இங்க அடிப்பட்டு செத்து என்னோட போனைத் தொலைதச்சேன்..?
எங்க என் போன்..?கொடு நான் போகனும்...!!!!!
நீயும் வாயேன்...?இனி உனக்கு இங்க வேலை இல்லை.....?”



ஆக்கம் ,................தயாஜி வெள்ளைரோஜா..................
ஊக்கம் ..............படித்து கருத்துரைப்போர்....................
ஏக்கம்...............அடுத்த வாய்ப்பு.....................
தாக்கம்....................சுஜாதா.............................

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்