பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 01, 2009

நானும் அவனில்லைதான்......!


இதை படிக்கும் முன்பு, எனது சில கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும். இது அவசியமா....? என்று நீங்கள் கேட்பதில் ஞாயம் இருந்தாலும் என் பக்கத்திலும் ஞாயம் இருக்கவே செய்கின்றது.

சரி இப்பொழுது நீங்கள் தயாரா இருப்பீர்கள் என நம்பிக்கையோடு என் கேள்விகளை தொடங்குகின்றேன்.

என்ன தயார்தானே...?

கேள்விகளுக்கு எண்கள் கொடுக்கப்போவதில்லை, உங்கள் எண்ணப்படி நீங்களே வாசிக்களாம். மகிழ்ச்சிதானே..!

உங்கள் அலுவலகத்தில் என்றும் இல்லாதா ஒரு நாள் உங்கள் மேலதிகாரியோ அல்லது சக பணியாளர்களோ முதல் நாள் நீங்கள் விரும்பிப்படித்த, ஏதாவது ஒன்றைப்பற்றி கெட்க அதற்கு நீங்கள் பதில் சொல்லி பாராட்டு வாங்குவீர்கள்.


ஆமாம் / இல்லை


மின்தூக்கியில் நீங்கள் எட்டாவது மாடிக்கு செல்ல கீழ்மாடியில் இருந்து செல்லவேண்டும்தானே....? அப்படி நீங்கள் செல்லத் தயாராய்

இருக்கும்போது விசையை அழுத்த முயலும் அந்த ஒரு வினாடி வித்தியாசத்தில் மின்தூக்கி சட்டென்று மேலே செல்ல ஆரம்பிக்கும்.

நீங்களும் மேலிருந்து யாரோ வருவதற்காக விசையை அழுத்தியிருப்பதாக உங்களை சமாதானம் செய்யும்போது, அந்த மின் தூக்கி வேறு எங்கும் நிற்காமல் நேராக நீங்கள் இருக்கும் முதல் மாடிக்கு வரும்......

யாரோ விசையை அழுத்தி விளையாடியிருப்பார்கள் என இப்போதும் உங்களை மீண்டும் சமாதானம் செய்வீர்கள்.

பின்னர் மின் தூக்கியில் நீங்கள் ஏறியதும் எட்டாம் மாடிக்கு செல்ல விசையை அழுத்துவீர்கள். ஆனால் அந்த மின் தூக்கி எந்த ஒரு காரணமும் இல்லாமல் ஒன்றாம் மாடி இரண்டாம் மாடி மூன்றாம் மாடி என ஒவ்வொரு மாடியாக ‘நின்று கதவை திறந்து மூடிச் செல்லும்’
இதற்கு என்ன நினைத்து தன்னை சமாதானம் செய்வதென்று தெரியாமல் முழிப்பீர்கள்.



ஆமாம் / இல்லை



காரில் தனியாக செல்வீர்கள், துனையாக யாரும் இல்லையென குறைபடாமல் ஏதாவது குறுந்தட்டோடு நீங்களும் பாடிக்கொண்டிருப்பீர்கள் அல்லது எதாவது வானொலிய கேட்டு ஒன்று பாராட்டுவீர்கள் இல்லை திட்டித் தீர்ப்பீர்கள்
(அறிவிப்பாளர்க்கே வெளிச்சம்...! )

காரில் உங்கள் தனிமை உறுதி செய்தபின், இயற்கையாகவே உங்களுக்கு பயம் தோன்றும்.
அதும் தூரத்தில் தெரிந்த மரங்களேல்லாம்.... உங்களை துரத்துவதாகவும் உங்களைப் பார்த்து சிரித்து கையசைப்பதாகவும் நினைப்பீர்கள்.
அந்த நேரத்தைச் சரியாக பயன்படுத்தி யாரும் ஒருவர் உங்கள் காருக்கு சுமார் கொஞ்சதூரத்தில் தனியாக நின்று கையசைத்து உதவிக் கேட்பார்.
நீங்களும் (உங்களில் சிலர்) “ஏதோ அவசரம் போல” என்று நினத்து காரை நிறுத்துவீர்கள் . அந்த நேரத்தில்தான் உங்கள் கைபேசி அலறும்.
கைபேசியில் பேசிக்கொண்டே நிறுத்திய காரில் இருந்து, கையசைத்தவரைப் பார்ப்பீர்கள் . ஆனால் அங்கு யாரும் இருக்க மாட்டார்கள்..! கைபேசியும் சட்டென்று உயிர் இழந்திருக்கும்..!



ஆமாம் / இல்லை



முக்கியமாக செல்ல வேண்டிய நிகழ்ச்சிக்கு, செல்லும் முன்பு உங்கள் கைபேசியை தேடுவீர்கள்... கிடைக்காது ..!
மனைவியிடம் கோவப்படுவீர்கள்....
பிள்ளைகளையும் திட்டுவீர்கள்.....
தலையை பிய்க்கும் நிலைக்கு நீங்கள் போனதும், உங்கள் கால்சட்டையில் இருந்து உங்கள் கைபேசி சிரிக்கும்..




ஆமாம் / இல்லை




உங்கள் பதில் ஆமாம் என இருந்தாலும் இல்லை என இருந்தாலும்......
இனி அப்படியெதும் நடந்தால் பயம் வேண்டாம். பதட்டம் வேண்டாம். கோவம் வேண்டாம்.
உண்மையை சொல்லிவிடுகின்றேன். என் சகதோழர்கள்தான் அப்படி செய்வது.
என்னைப் போன்று அவர்களுக்கு கதை சொல்லத் தெரியாததால் இதுதான் பொழுது போக்கு.

மன்னித்துவிடுங்களேன்.

.............. தயாஜி வெள்ளைரோஜா............

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்