பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 01, 2009

அப்பா........








வெள்ளை ரோஜா



நிஜப்பெயரில் புரிந்ததைக்
காட்டிலும்......
புனைப்பெயரில் அறிந்ததுதான்
அதிகம்............
உம்மை சந்தித்தால் கேட்பாளாம்,
என் தோழி....
“புனைப்பெயரில் மறைவதேன்..?” என,

அவளுக்கு மட்டுமல்ல பலருக்கு
தெரிவதில்லை.....
பெயர் மாற்றம் அல்ல இது,..!
சிந்தனை உருமாற்றம்,

நமக்குள் இயங்கும் இன்னொருவன்..!
நம்மை ஆட்சிபுரியும் இன்னொருவன்..!
இவன்,
நிஜப்பெயரில் ஏற்பட்ட வலிகளையும்
அவமானங்களையும் கலையும் ..
வித்தைப் புரிந்தவன்.... கற்பனை
விந்தின் உதித்தவன்......

உமக்கான நண்பர்கள்
என்னை நெருங்கினாலும்..
உமக்கு இன்பம்தான்...?

நாம் செல்லும் ஒவ்வொரு
நிகழ்ச்சிக்கும்......
பின் இருக்கை உமக்கும்
முன் இருக்கை எமக்கும்
தயாராய் இருக்கும்....உம் விருப்பப்படி.....!?
இடுப்பில் குத்தி என்னை,
எழவைத்து..
மேடைக்கு அனுப்பியது நிச்சயம்
உம் சாமர்த்தியம்........

ஆரம்பக்காலத்தில் எமக்கும்
எரிச்சல் வந்தது.....
உம் தந்தை தவறியதையும்
எம் தந்தை செய்வதையும்
உணரும் முன்பு........!

உமக்குள்ள பெண்
ரசிகர்களை மிஞ்ச எமக்கு..
கொஞ்சம் ‘அதிகம்தான்’ அவகாசம்
தேவை.....!

அதெப்படி அம்மாவைத்தவிர
பலர் உம் ரசிகைகள்.....
சிரிப்புதான் வருது...... எம் ‘கதை’யில்
குற்றம் தேடும்போது..
அம்மா எனக்கு வக்காலத்து
வாங்குவதும்...
சில சமயம் எம் கதையைப் படித்துக்காட்ட...
இப்படியும் நடக்குதா? என அம்மா....
ஆச்சர்யபட..
அம்மாவுக்கு தமிழ் தெரியாதது..
எவ்வளவு வசதி உமக்கு.......?
படைப்பவரின் மகன்
படைப்பதில்லையாம்.....
உம் மாதிரி அப்பா
கிடைக்காததாலோ.......!

“புலிக்கு பொறந்தது பூனையாகுமா ?”
இப்படியாகச் சொன்É¡லும்..

இது புலியை மிஞ்சும் பூனையென......!
சொல்லும்போது..
அப்பாவா..? ஆசானா..?
குழப்பம் ஏற்பட்டாலும்..
எம் எழுதுகோல் ,
என்றும் உம்
எழுத்தின் வாரிசுதான்..........


கண்முன்னே
“முடியுமா?” என
கொட்டினாலும்..,
மறைமுகமாய் எம் உழைப்பை
தட்டிக்கொடுப்பதை உணர்ந்தேன்......

எõ வயதினர்,
மோட்டாரில் பயணிக்கும்போது..
எம்மை நடக்கவைத்தது..
எõ சிறகுக்கு அளித்த பயிற்சியென..!
உணராமல் இல்லை....

என் மனதில்..
வயதின் காரணமாய் ஏற்பட்ட
சபலத்தை மாற்றினீர்.....!
“மாற்றம் ஏற்படும்” என்ற
நம்பிக்கைப் பார்வையில்..

அண்ணன் தம்பியென நம்மை,
நம்மை அறிந்திருப்போரை..... நினைக்கின்றேன்..!
எம்மது முதுமையா..?
உம்மது இளமையா..?

அந்த பயமே உம் அருகிள் நடக்க எனக்கு.........

பிறந்த தோட்டத்தை மறந்து பலர்.....பறக்க...!
இன்னமும் உம் பெயருக்குப்பின்னால்
வாழ்கின்றது..
உன்னை வளர்ந்த தோட்டம்...
நம் 'யு.பி' தோட்டம்,

அடிக்கடி சொல்லும் அறிவுரையில்
கட்டாயம் இடம்பெறுவது...
"பொண்ணுங்க விசியத்திலே பார்த்துடா....?!! "

உங்க பிள்ளைதானே.......????

ஆயிரம் மகுடங்கள் கூடினாலும்,
எமக்கான 'வைர கிரீடம்.......'

"வெள்ளைரோஜாவின் பிள்ளைரோஜா"
எனச் 'சொல்லும் 'கிரிடம்

அது ''வெல்லும் கிரீடம்

இப்படிக்கு,
பிள்ளை ரோஜா.....
..................தயாஜி வெள்ளைரோஜா...................






Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்